பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் ஓவிய வேங்கை வீரமுத்து சந்தானம் ஐயா அவர்களுக்கான வணக்க நிகழ்வு எதிர்வரும் (22.07.2017) சனிக்கிழமை அன்று பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழின உண்வாளரும் சிறந்த ஓவியரும் தமிழின அழிப்பின் சாட்சியாக தஞ்சையில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் சிற்பியும் பன்முகக் கலைஞருமாகிய ‘ஓவியவேங்கை” வீரமுத்து சந்தானம் ஐயா அவர்களின் நினைவு சுமந்து வணக்கம் செலுத்துவோம் வாரீர் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – மாவீரர் பணிமனை அழைப்புவிடுத்துள்ளது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.