முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பை மேற்கொண்டு திட்டமிட்ட குடியேற்றத்தை மேற்கொள்ளவுள்ளமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று மேற் கொள்ளப்பட்டது. சுமார் 7 கிலோ மீற்றர் நடந்து சென்றே மக்கள் தமது எதிர்ப்பை வெளி யிட்டனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிவு பகுதியில் உள்ள காடுகளை அழித்து அந்தப் பகுதியில் முஸ்லிம் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டுவருகின்றன.
இதற்கு குறித்த சில அரச அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
இந்த குடியேற்றத் திட்டத்திற்கு எதிராக வும் எமது சொத்தான வனங்களை அழிப்பதற்கு எதிராகவும் மக்களும் இளைஞர்களும் ஒன்றுதிரண்டுள்ளனர்.
இதில் கலந்து கொண்ட இளைஞர்கள், இதன் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீனே இருப்பதாகவும் தெரிவித்து எதிர்ப்பை வெளியிட்டதுடன் அவர் இந்த நடவடி க்கையில் இருந்து ஒதுங்க வேண்டும் எனவும் கிழக்கை இழந்ததுபோல் வடக்கையும் இழக்க முடியாது என ஆவேசமாக முழக்கமிட்டனர்.