உத்தரபிரதேசம் மாநிலம் சந்தவ்லி மாவட்டத்தில் நேற்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் தங்கியிருந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கட்டடம் இடிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புப் பிரிவுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இடிந்து விழுந்த கட்டடத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தும்
பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடம் இதுவென தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்தச் சம்பவம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். கட்டட விபத்து குறித்து சந்தவ்லி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.