ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா நகருக்கு அருகில் உள்ள நிக்கோல்ஸ்கோயே தீவுப்பகுதிக்கு அருகே 7.8 ரிக்டர் அளவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மற்றும் அமெரிக்க பசிபிக் சுனாமி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், ரஷ்யாவின் நிகோல்ஸ்கோயே (Nikol’skoye) தீவிலிருந்து 200 கி.மீ தொலைவில் 7.8 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 6 மைல் (10 கிமீ) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மிகப் பாரிய சுனாமி தாக்குதலை ரஷ்யா எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் அது 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக பின்னர் கணிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டது.