டென்மார்க்கில் தீவிரவாத தாக்குதல் : இருவர் கொலை!

0
151

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கருத்துரிமை குறித்த விவாதம் ஒன்று நடத்தப்பட்டுக்கொண்டிருந்த உணவகம் ஒன்றிலும், பின்னர் யூதர்களின் வழிபாட்டிடம் ஒன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியை பொலிசார் பின்னர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக்கொன்றதாக அறிவித்துள்ளனர்.

முதலில் நடந்த உணவகத் தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். யூத வழிபாட்டிடத் தாக்குதலில் வேறு இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

இந்த இரு தாக்குதல்களிலும் ஒரே நபர்தான் சம்பந்தப்பட்டிருந்தார் என்று போலிஸார் கூறினர்.

அந்த நபர் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு முகவரியை கண்காணித்த பொலிசார் அவர் அந்த இடத்துக்கு வந்ததும் பொலிசார் மீது துப்பாக்கியை எடுத்து சுட்டதாகவும், பின்னர் பொலிசார் திருப்பிச் சுட்டதில், அவர் கொல்லப்பட்டதாகவும் கூறினர்.

உணவகத்தில் நடந்த கருத்துரிமை குறித்த விவாதத்தில், முன்னர் இஸ்லாமிய இறைதூதர் முகமது நபியை கார்ட்டூனாக வரைந்து சர்ச்சைக்குள்ளான, கேலிச்சித்திரக் கலைஞர் லார்ஸ் வில்க்ஸும் கலந்து கொண்டிருந்தார்.

அவர் இந்தத் தாக்குதலில் காயமேதுமின்றித் தப்பினார்.

இந்த விவாதத்தில் பிரெஞ்சுத் தூதர் பிரான்ஸுவா ஸிம்ரேயும் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த மாதம் பாரிஸில் நையாண்டி இதழான “சார்லி எப்தோ” மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, இது போல தெய்வ நிந்தனை செய்ய கலைஞர்களுக்குத் துணிச்சல் வருமா என்பது குறித்து இந்த விவாதம் நடத்தப்படுவதாக, இந்த விவாதம் குறித்த அறிவிப்பு கூறியிருந்தது.

denmark-shooting1 denmark-shooting-super-169

denmark-shooting

[mom_video type=”youtube” id=”/ke0h9ns_uCo”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here