
நேற்றுக் காலை பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் இடம்பெற்ற இவ் விபத்தில் ஆதி கோவிலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கணேஸ் ராஜ்குமார் (வயது 18) என்ற இளைஞரே பலியானவராவார்.
யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டி ஒன்றில் நடத்துநராக பணிபுரியும் பிரஸ்தாப இளைஞர் நேற்று காலையிலேயே கொழும்பில் இருந்து வந்துள்ளார்.
உறவினர் ஒருவரின் மரணச் சடங்கு கிளிநொச்சியில் இடம்பெற்றதால் நண்பனின் உந்துருளியில் கிளிநொச்சி நோக்கிச் சென்றதாகவும் அதன்போதே மேற்படி விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.