இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து படகுகள் மற்றும் மீனவர்களையும் உடனடியாக விடு தலை செய்யக் கோரி தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் மீனவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராத மும் 2 வருட சிறைத் தண்டனையும் படகுகளுக்கு அபராதம் விதிக்கும் வகையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் இந்த சட்டத்தால் நாகை மாவட்டம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரையுள்ள வங்கக்கடலில் மீன்பிடிக் கும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தே, இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.