ஸ்ராஸ்பூர்க் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகொள்ளப்பட்ட தமிழீழ
தடை நீக்கிகள் நாள்.
பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரில் தமிழீழ கரும்புலிகள் தினம் முதன் முறையாக
கடந்த 05.07.2017 புதன் கிழமை பகல் 15.30 மணிக்கு நினைவு கூரப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழீழ உணர்வாளர்கள் ஏற்றிவைத்தனர்.
ஈகைச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன் மாவீரனின் சகோதரி
ஏற்றிவைத்தார்.
நிகழ்வில் மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் மக்கள் ஆகியோருக்கான
அகவணக்கம் செலுத்தப்பட்டு, தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப் பட்டது.
தொடர்ந்து நினைவுரைகளை நடராசா கிருபானந்தன், மத்தியுஸ்
ஆகியோர் நிகழ்த்தினர், மாணவன் கரிஸ் அவர்களின் கவிதை, ஆசிரியர்
ஜசோதா அவர்களின் கவிதையோடு ஏனைய நிகழ்வுகளும் இடம்பெற்று
நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.