புதன் கிரகத்திற்கு கொண்டு செல்லும் பெப்பிகொலம்போ விண்வெளி பயணத்திற்கு பயன்படுத்தப்படும் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய செயற்கைக்கோள்கள் இன்று (வியாழக்கிழமை) காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இரு விண்கலங்களும் பூமியிலிருந்து ஏவப்படுவதற்குமுன் இணைக்கப்படும். தொடர்ந்து, பூமியின் உட்புற பகுதிக்கு இரு விண்கலங்களும் பயணிக்கும்.
அவசியம் ஏற்பட்டால் வட கொரியா மீது ராணுவ படைகள் பயன்படுத்தப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியா – இஸ்ரேல் பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்வதை எச்சரிக்கையுடன் நோக்கும் பாகிஸ்தான் ஊடகங்கள்
புதன் கிரகத்தை சென்றடைந்தவுடன் இரு கலன்களும் பிரிந்து வித்தியாசமான ஆனால் ஒன்றுக்கொன்று பயன்தரக்கூடிய கண்காணிப்பை மேற்கொள்ளும்.
”அடுக்கப்பட்ட விமானங்கள்” என்று கூறப்படும் இரு விண்கலங்களின் இணைப்பின் முழுமையையும் இன்றைய தினம் ஊடகங்கள் இறுதியாக பார்த்து கொள்ளலாம்.
இந்த நிகழ்வு நெதர்லாண்டின் நூர்ட்விக்கில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறுகிறது.
ஐரோப்பாவின் மெர்க்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பானின் மெர்க்குரி மேக்னேட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் ஃபிரெஞ்சு கினியாவில் உள்ள விண்கலம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதற்குமுன், தனித்தனியாக இறுதி சோதனைகளை நடத்துவதற்காக இரண்டும் பிரிக்கப்பட உள்ளன.
இந்த இரட்டை செயற்கைக்கோள் பயணம் 2018 ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் ஏரியன் ராக்கெட் ஒன்று அனைத்து சாதனங்களையும் விண்வெளிக்கு கொண்டு செல்ல உள்ளன.
அனைவரும் பொறுமையாக இருக்கவேண்டும். காரணம், அதன் இலக்கை அடைய இந்த இரட்டை செயற்கைக்கோள்களுக்கும் ஏழு ஆண்டு காலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(bbc)