இழுவைமடி தொழிலை தடை செய்யும் சட்டமூலம் தொடர்பாக த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீனவ பிரதிநிதிக ளுக்குமான கலந்துரையாடலில் மீனவ சமூகத்தினரின் கருத்துக்களை கூறுவதற்கு அனுமதி அளிக்காமல், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற முற்பட்டதால் நேற்றைய தினம் அங்கு பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.
இழுவை மீன், மீன்பிடி தொழிலை தடைசெய்யும்சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி பாரா ளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நிலை யில், அந்த சட்டத்துக்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரியும், குறித்த சட்டமூலத்தை கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் கலந்துரையாடல் ஒன்று வடமாகாண கடற்தொழிலாளர் இணை யத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் கிறீன்கிறஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
அப்போது கடற்தொழிலாளர் இணைய த்தின் தலைவர்கள் உரையற்றியதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் உரை யாற்றியிருந்தானர். அவர்களின் உரை முடிந்த பின்னர், குறித்த கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வை நிறைவுக்கும் கொண்டு வந்தனர். இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து வெளி யேற முற்பட்டனர்.
அவ் வேளையில் அங்கிருந்த மீனவ சங்க பிரதிநிதிகள் தமது எதிர்ப்பை தெரி வித்ததுடன், எமது கருத்துக்களை கேட்கா மல் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.
பின்னர் மீனவ சங்க பிரதிநிதிகளை கரு த்து தெரிவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னரே சுமூகமான நிலை ஏற்பட்டிருந்தது.
மேற்படி கலந்துரையாடலில் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், திருமதி சாந்தி சற்குணராசா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.