வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகன சாரதியால் அடாவடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம், கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
அப்போது மீனவ சமூகத்தி னரின் கருத்துக்களைகூறுவதற்கு இடமளிக்காமல், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற முற்பட்ட போது அங்கு பெரும் குழப்ப நிலை உருவாகியது.
அவ்வேளையில் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளருடன் தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய வாகன சாரதி அடாவடியாக நடந்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை ஊடகவியலாளர் படம்பிடித்துக்கொண்டிருந்த போது, யாரை படம் எடுக்கிறீர்கள்? விசேட அதிரடிப்படையை படம் எடுக்கக் கூடாது, நீங்கள் வலம்புரி பத் திரிகை ஊடகவியலாளர் தானே, இந்த சம்பவத்துக்கு என்ன செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும், எடுக்கிற படங்களை எடுங்க நாங்க உங்களுக்கு செய்யிறதை செய்து காட்டிறோம், எங்களை பற்றி வெளியே கேட்டு தெரிந்து கொள்ள வேண் டும், உங்களை கவனிக்கிற இடத்தில் கவனிப்போம், அரசியலுக்குள்ள வந்தால் சட்டை கிழியும் எனக் கூறி குறித்தவாகன சாரதி அடாவடியில் ஈடுபட்டார்.
இதன்போது அந்த இடத்துக்கு வந்த சக ஊடகவியலாளர்களும் அங்கு நின்ற சில பாதுகாப்பு பிரிவினரும் குறித்த சாரதியை அப்பகுதியில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.