27 வருடங்களின் பின் னர் விடுவிக்கப்பட்ட தமது சொந்த நிலத்தை ஆர்வத்து டன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். நேற்று விடு விக்கப்பட்ட காணிகளில் மீள குடியேறுவதற்காக 50 குடும் பங்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளன.
குறித்த துறை முகத்தையும், தமது காணிகளையும் விடு விக்குமாறு கோரி கடந்த பல ஆண்டு களாக அப்பகுதி மக் கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட் டங்களுக்கு அரசி யல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராடி யிருந்தன. எனினும் மயிலிட்டி விடுவிப்பு என்பது கடினமான ஒன்றாகவே கருதப் பட்டது.
நேற்றையதினம் மயிலிட்டி துறைமுக மும் அதனோடு இணைந்த நிலங் களுமாக மொத்தம் 54.6 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிறீலங்காப் படைகளின் நிலைகள் பரவலாக இன்னும் இருக்கின்றன.
காலை 9 மணிக்கு அனை வரையும் வருமாறு அழைத்த இரா ணுவத்தினர் விடுவித்த பகுதிக்குள் சுயமாக மக்களை செல்ல விடாமல் தமது பேருந்து களிலேயே ஏற்றி சென்று நிகழ்வு நடைபெறும் இடத் திற்கு இறக்கப்பட்டனர்.
இதே போன்று அரச ஆதரவு ஊடகங்கள் வாகனங்களில் உள்ளே செல்ல அனுமதிக் கப்பட்ட போதிலும் ஏனைய ஊடகங்கள் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
பலத்த பாது காப்பு கெடு பிடிகளுக்கு மத்தியிலும் பொது மக்கள் தமது சொந்த நிலங் களை பார்ப் பதில் ஆர்வம் காட்டி யிருந்தனர்.
அங்கிருந்த கோவில் களில் உடனடியா கவே வழிபாட்டு நட வடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.