பிரான்சில் பாரிசு மண்ணில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகவும் ஒரு நாளைக்கு பத்தாயிரம் வௌிநாட்டு மக்களுக்கு மேலாக பார்வையிட்டுச் செல்லும் துறக்கற்றோ ( சுதந்திரசதுக்கத்தில்) பிற்பகல் 3.15 மணிக்கு விடுதலைச்சுடர் கொண்டு வரப்பட்டது.
அனைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியிலான பதாதைகள் பிடிக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் மக்களுக்கு கொடுக்கப்பட்டன.
கடுமையான குளிருக்கு மத்தியிலும் குழந்தைகள் பொியவர்கள் என உணர்வுள்ள தமிழர்கள் பங்கு பற்றியிருந்தனர். பல வௌிநாட்டவர்கள் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆர்வத்துடன் கேட்டறிந்ததுடன் தமது தரப்பில் ஆதரவுகளையும் தொிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 17.00 மணிக்கு லாக்கூர்னோவ் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் சார்பாக திரு. அகிலன் அவர்கள் விடுதலைச்சுடாினை வாங்கிக்கொண்டார். தமிழாின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.