மைத்ரி சிறிசேன தமிழகம் வந்தால் கருப்புக்கொடி: வைகோ

0
145

06-vaiko9-600இந்தியா வரும் இலங்கை அதிபர் சிறிசேன தமிழகம் வந்தால் அவரது வருகையை எதிர்த்து அவருக்கு கறுப்புக் கொடி காண்பிக்கப்படும் என்று, மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் இந்திய வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இந்தியா வரும்போது தமிழகத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்துக்கு அவர் செல்ல இருப்பதாகவும், இதை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளது தமக்கு தெரிய வந்துள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

அப்படி மைத்ரி சிறிசேன தமிழகம் வந்தால் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் கருப்புக்கொடி காண்பிக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here