13 ஆவது திருத்த சட்டம் தமிழ் மக்­களை தமது அடை­யாளம் தெரி­யாமல் ஆக்­கி ­விடும்!

0
362


நாங்கள் கோருவதில் எதனையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப்பார்வையாகும். எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க கொழும்பின் ஜன்னல், கொழும்புப் பார்வை என்பன ஒருபோதும் உதவாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூ­ரியில் ஆறு­மு­க­நா­வலர் சிலை திறப்பு விழா நேற்று முன்தினம் (30.06.2017) நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது, 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கூட வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெறாது. ஆகவே நாங்கள் கோருவதில் எதனையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப்பார்வையாகும். எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க கொழும்பின் ஜன்னல், கொழும்புப் பார்வை என்பன ஒருபோதும் உதவாது.
தேசியம், சுய­நிர்­ணயம், தன்­னாட்சி, தாயகம், வடக்கு, கிழக்கு இணைப்பு என்று அடிப்­ப­டை களைக் கூறி­விட்டு ஒற்­றை­யாட்­சியின் கீழ் ‘13 ஆவது திருத்த சட்ட முழு­மை­யான நடை முறைப் ப­டுத்தல்’ என்­பதை ஏற்­றுக்­கொள்­வது என்­பது எத்­த­கைய விப­ரீ­தங்­களை ஏற்­ப­டுத்தும் என்று நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.
நாங்­கள் தான் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். எமது நிலை­யி­லி­ருந்தான் பிரச்­சி­னையை அணு­க­வேண்­டுமே தவிர கொழும்பின் பார்­வை­யி­லி­ருந்து அணு­க­மு­டி­யாது. ஒற்­றை­யாட்­சியில் 13 ஆவது திருத்த சட்டத் தீர்­வா­னது என்­றைக்­குமே தமிழ் மக்­களை தமது அடை­யாளம் தெரி­யாமல் ஆக்­கி ­விடும். ஒற்­றை­யாட்சி எம்மை என்­றைக்­குமே அடி­மை­க­ளாக்­கி­விடும்.
இதனை நான் வலி­யு­றுத்­து­வதால் என்னை ஓரங்­கட்டி அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டி­விட பல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. சிலர் சதிகள் சறுக்­கி­யதும் சவால்­களில் ஈடு­பட முன்­வந்­துள்­ளார்கள்.
நாவலர் தம­து­கொள்­கை­களில் விட்டுக் கொடுக்­கா­த­ஒ­ரு­நி­லையைப் பின்­பற்­றி­வந்­தமை பலரால் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. அண்­மையில் ஒருவர் என்­னிடம் கூறினார் ஏன் நீங்கள் தமிழ் மக்­களின் உரி­மைகள் சம்­பந்­த­மாக நாவலர் இருந்­த­துபோல் விடாப்­பி­டி­யாக நிற்­கின்­றீர்கள்? சம்­பந்தர் போல் விட்டுக் கொடுக்­க­லாமே என்று. அதற்­குநான் சம்­பந்தர் ஐயா விட்டுக் கொடுக்­கின்­றாரோ இல்­லையோ நான் அறியேன். ஆனால் அடிப்­படை அத்­தி­வா­ரத்தை நாங்கள் கெட்­டி­யாகக் கட்­டா­விட்டால் முழுக் கட்­ட­ட­முமே ஒருநாள் தகர்ந்து விழுந்­து­விடும். பிழை­யான அத்­தி­வா­ரத்தில் சரி­யான கட்­டடம் காலா­கா­லத்தில் நிறுவப் படலாம் என்று எண்­ணு­வ­து­ம­ட­மை­என்றேன்.
கொஞ்சம் கொஞ்­ச­மாக பிறகு கட்­டலாம் என்­பது கூட தகுந்த அத்­தி­வாரம் இட்ட பின்னர் தான் பொருந்தும். இத­னால்தான் சைவ­ச­மய அனுஷ்­டா­னங்­க­ளிலும் அவற்றின் நெறி­மு­றை­க­ளிலும் ஒரு இறுக்கம் நாவ­லரால் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. அன்பு நிலை­வேறு அனு­ப­வ­நி­லை­வேறு. அடிப்­ப­டை­க­ளை­விட்டுக் கொடுக்­காது அன்­பு­நி­லையில் வாழலாம் என்­பதை எமக்­கு­ணர்த்­தி­யவர் நாவலர்.
தேசீயம்,சுய­நிர்­ணயம்,தாயகம்,தன்­னாட்சி,வடக்­கு­கி­ழக்கு இணைப்­பு­என்­று­அ­டிப்­ப­டை­களைக் கூறி­விட்­டு­ஒற்­றை­யாட்­சியின் கீழ்13ஆவ­து­தி­ருத்­தச்­சட்­ட­மு­ழு­மை­யான நடை­மு­றைப்­ப­டுத்தல் என்­ப­தை­ஏற்றுக் கொள்­வ­தென்­ப­து­எத்­த­கை­ய­வி­ப­ரீ­தங்­களை ஏற்­ப­டுத்தும் என்று நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.
ஒற்­றை­யாட்சி என்­ற­வுடன் நாம் கோரி­ய­தே­சியம்,தாயகம்,சுய­நிர்­ணயம்,தன்­னாட்­சி­என்­பன இருந்த இடந் தெரி­யாமல் மறைந்­து­வி­டு­வன. 13ஆவது திருத்­தச்­சட்ட முழு­மை­யான நடை­மு­றைப்­ப­டுத்­தலின் கீழ் வடக்கு கிழக்கு இணைப்பு கூட இடம்­பெ­றாது. ஆக­வே­நாங்கள் கேட்­பதில் எதை­யு­மே­த­ராது ஒரு­தீர்வைப் பெற­எத்­த­னிப்­பதே எம­து­கொ­ழும்புப் பார்வை. எமது இனப்­பி­ரச்­ச­னையைத் தீர்க்க கொழும்பின் யன்னல்,கொழும்பின் பார்­வை­யா­வன ஒரு­போதும் உதவா என்­ப­தேஎன் கருத்து. அர­சியல் பிரச்­ச­னை­யா­ன­து­எங்­க­ளுக்­கு­ஏற்­பட்­ட­ஒன்று. நாங்கள் தான் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். எம­து­நி­லையில் இருந்­துதான் பிரச்­ச­னை­யை­அ­ணு­க­வேண்­டுமே ஒளி­ய­கொ­ழும்பின் பார்­வையில் இருந்­தல்ல. ஒற்­றை­யாட்­சியில் 13வது திருத்தச் சட்டத் தீர்­வா­னது என்­றென்­றைக்­குமே தமிழ் மக்­களைத் தமது அடை­யாளம் தெரி­யாமல் ஆக்­கி­விடும்.ஒற்­றை­யாட்­சி­எம்மை என்­றென்­றைக்­குமே அடி­மைகள் ஆக்­கி­விடும்.எமது தனித்­துவம் பேணப்­ப­ட­வேண்­டு­மென்­றால்­வெறும் 13ஆவது திருத்தச் சட்டத் தீர்வை நாங்கள் முற்­று­மு­ழு­து­மாக எதிர்க்­க­வேண்டும். இதை­யே­தி­ரு­வா­ளர்கள். அமிர்­த­லிங்கம்,சிவ­சி­தம்­பரம் மற்றும் சம்­பந்தன் ஐயா­ஆ­கியோர் 28.10.1987ஆம் திக­திய கடி­தத்தால் ரஜீவ் காந்­திக்கு வலி­யு­றுத்­தி­னார்கள்.அவர்கள் வலி­யு­றுத்­தி­யதை நான் இன்று வலி­யு­றுத்­து­வதால் என்னை ஓரம் கட்டி அர­சி­யலில் இருந்து விரட்­டி­வி­ட­பல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. சிலர் சதிகள் சறுக்­கி­யதும் சவால்­களில் ஈடு­ப­ட­முன்­வந்­துள்­ளார்கள். எமது இனம் பற்­றி­சிந்­திப்­பது நாவ­லரின் இறுக்கச் சிந்­த­னை­க­ளுக்கு ஒப்­பா­னது என்றால் இன்று நாவ­லரின் சிந்­த­னை­களைப் பின்­பற்­ற­வேண்­டி­ய­ஒரு கடப்பாடுஎமக்கு ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம்.
அவ்வாறானஅடிப்படையில் பற்றுறுதி கொண்ட ஆறுமுகநாவலர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் ஆங்கிலக் கல்வியைக்கற்ற,தமிழைக் கற்பித்த,தமிழ் விவிலிய நூலை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாகஇருந்தபேர்சிவல் பாதிரியார் அதிபராக இருந்த இதே கல்லூரியில் அமைத்து திரைநீக்கம் செய்வது சமயங்களின் எல்லையைக் கடந்து தமிழுக்கும் அதன் செழுமைக்கும் வழங்கப்படுகின்ற ஒரு அங்கீகாரம் என்றவகையில் இன்றைய நிகழ்வுகாலம் கடந்தும் சரித்திரத்தில் இடம்பெறும் ஒருநிகழ்வாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here