மஹிந்த சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சகல விதமான சலுகைகளும் ரத்து: சட்டத்துறை வல்லுநர்கள்!

0
124

Mahinda_PTIஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான இரவன்று அலரிமாளிகை யில் இடம்பெற்றதாகக் குற்றஞ் சாட்டப்படும் அரச விரோத சூழ்ச்சி யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருப்பதாக எவ்விதத்திலாவது உறுதிப்படுத்தப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்குரிய வரப்பிரசாதங்கள் இழக்கப்பட நேரிடுமென சட்டத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டி லிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புக ளின் பிரதிநிதிகள் குழு வொன்று அண் மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந் ததாகத் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here