ஜேர்மனியில் சிறப்புற நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2017 !

0
323

ஜேர்மனி தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டிகள் கடந்த 24.6.2017 சனிக்கிழமை டுசில்டோர்ப் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளும், மற்றும் விளையாட்டுக் கழகங்களும் பங்கு பற்றி சிறப்பித்தன.
இந்த போட்டியில் அறுபத்தி மூன்று கழகங்கள் பங்குபற்றின. இதில் தழிழாலயங்கள் தவிர்ந்த கழகங்களாக ஜேர்மனியின் பல பாகங்களிலும் இருந்துவந்த பதினைந்து கழகங்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
பத்தொன்பது வயதிற்கு மேற்பட்ட தமிழாலய மாணவர்களுடன் வெளிக்கழகங்கள் போட்டியிட்டமை மிகச் சிறப்பான நிகழ்வாக அமைந்தது. தமிழாலய மாணவர்களின் பெண்கள் அணிகளிற்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது குறிப்பிடத் தக்கது.


போட்டிகளின் முடிவில் ,
12 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில்
முதலாம் இடத்தை Kaarst தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Essen தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Meebuch தமிழாலயமும்
16 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில்
முதலாம் இடத்தை Neuss தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Essen தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Stuttgart தமிழாலயமும்
16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில்
முதலாம் இடத்தை Düsseldorf தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Kaarst தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Meerbusch தமிழாலயமும்
11 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்
முதலாம் இடத்தை Mönchemgladbach தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Duisburg தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Münster தமிழாலயமும்
13 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்
முதலாம் இடத்தை Dillenburg தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Wuppertal தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Meerbusch தமிழாலயமும்
16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் விரிவில்
முதலாம் இடத்தை Essen தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Herne தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Stuttgart தமிழாலயமும்
19 வயதிற்கு உட்டபட்ட ஆண்கள் பிரிவில்
முதலாம் இடத்தை Mönchemgladbach தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Krefeld தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Mönchemgladbach தமிழாலயமும்
21 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்
முதலாம் இடத்தை Neuss தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Münster தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Leverkusen தமிழாலயமும்
21 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில்
முதலாம் இடத்தை Tamil Blues Frankfurt விளையாட்டுக் கழகமும்
இரண்டாமிடத்தை Münster United விளையாட்டுக் கழகமும்
மூன்றாமிடத்தை Berlin விளையாட்டுக் கழகமும்
பெற்றுக்கொண்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here