வடக்கு கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கோரிக்கை கடிதத்தினை உறவுகள் அனுப்பி வைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை தாம் எதிர்ப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டோரின்; உறவுகள் 100 நாட்களையும் தாண்டி போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து 5 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
ஆனால் இதுவரை அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. எனவே குறித்த விடயம் தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் ஜனாதிபதியிடம் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும; அத்துடன் குறித்த சட்டமூலம் தொடர்பில் பாதிக்கப்பட்ட உறவுகளுடன் கலந்தாலோ சிக்கவில்லை.
குற்றங்களை விசாரித்து தண்டனை கொடுக்கும் அதிகாரம் இந்த சட்டமூலத்துக்கு இல்லை, எம்மால் பிரேரிக்கப்பட்ட சர்வதேச பொறிமுறையோ அல்லது கலப்பு பொறிமுறையோ விசாரணையில் கடை ப்பிடிக்க வழிசெய்யப்படவில்லை என்ற மூன்று காரணங்களுக்கான குறித்த சட்டமூலத்தை நாம் எதிர்க்கிறோம்.
எனவே எமது கோரிக்கைக்கு அமைவாக வட-கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டமூலத்தை எதி ர்த்து வாக்களிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தமது கடிதத்தில் கோரியுள்ளனர்.