இராணுவத் தலையீடுகள் நாவற்குழியில் அதிகரிப்பு: விஜயகலாவிடம் மக்கள் முறைப்பாடு!

0
114

Jaffna October 2012இராணுவம் எமது அபிவிருத்திகளை குழப்பிக் கொண்டிருப்பதாக மகளிர் விவகார பிரதியமைச்சரிடம் நாவற்குழி புதிய குடியேற்றத்திட்ட மக்கள் முறையிட்டுள்ளனர்.

மேலும் மலசலகூடவசதி, குடிதண்ணீர் வசதி, போக்குவரத்து  வசதி மற்றும் காணி உறுதிப்பத்திரம் எதுவுமற்ற நிலையிலேயே கடந்த 5 வருடங்களுக்கு மேலாகவும் வாழ்ந்து வருவதாகவும் எவரும் தம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு நடவடிக்கையயடுக்கவில்லையயனவும் அம்மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

நாவற்குழி ஜே/ 294 கிராம சேவை யாளர் பிரிவுக்குட்பட்ட புதிய குடியேற்றத்திட்ட மக்களை முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சந்தித்து கல ந்துரையாடியிருந்தார்.
இதன்போதே அம்மக்கள் எமது  பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் கண்ணீ ருடன் கூறியிருந்தனர்.எம்மைப் பார்க்க வருகின்ற அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும்  பல காரணங்களைக் கூறி எம்முடைய காணிப் பிரச்சினை அடிப்படை வசதிப் பிரச்சினைகளை உதா சீனம் செய்து வருகின்றனர்.

எமக்கு வருகின்ற உதவிகள் அனைத்தும் அருகிலுள்ள சிங்கள மக்களின் குடியேற்றத்திற்கு திட்டமிட்டு வழங்கப் படுகின்றன.எமக்கு பிற்பாடுகுடியேறிய சிங் கள மக்கள் அனைத்து வசதிகளுட னும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எம்மை பழைய  இடத்திலிருந்து வெளி யேற்றி இங்கு குடியமர்த்தி விட்டு வனா ந்தரப்பகுதிக்குள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற இடத்தில் குடியேற்றியுள்ளனர்.

ஐயனார் கோவிலடியில் அமைந் துள்ள சனசமூக நிலையத்தினை பொது நிறுவனத்தினர் கட்டித் தந்தனர். அத ற்கு முத்தமிழ் சனசமூக நிலையம் என வும் பெயரிடப்பட்டது.ஆனால் இராணுவம் அப்பெயரில் சனசமூகநிலையம் பதிவு செய்யப்ப டக்கூடாது என்றுமிரட்டி சனசமூக நிலை யத்தினை பதிவு செய்வதற்கும் தொடர்ச் சியாக இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் எதுவுமற்ற காரணத்தினால் எந்த அடிப்படைத் தேவை கள் என்றாலும் வனாந்தரத்திலேயே மேற்கொள்ளவேண்டியஅவலநிலை காணப்படுகின்றது.
வயதுக்கு வந்த பெண்கள் இதனால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவ தோடு பலவித இடையூறுகளுக்கும் ஆளாகின்றனர்.

மழை காலங்களில் தோல் சார்ந்த நோயினால் இப்பகுதி மக்கள் பெரு மளவில் பாதிக்கப்பட்டு வருகின்றதோடு விசஜந்துக்களும் அச்சுறுத்துகின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்.

மக்களின் பிரச்சினைகளை கேட்ட பிரதியமைச்சர் புதிய அரசாங்கம் பொறுப் பேற்றதன் பின்னர் இங்கு இராணு வத்திற்கு இடம்கிடையாது என்றும் இராணுவம் உங்களது பிரச்சினைகளில் தலையிட்டால் அனுமதிக்க வேண்டாம்.
முடிந்த அளவில் உங்களது அடிப் படை பிரச்சினைகளை குறுகிய காலப் பகுதிக்குள் தீர்த்து வைப்போம் எனவும் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here