கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம் நேற்றுடன் 110 ஆவது நாளை எட்டியுள்ளது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க
வலியுறுத்தி மேற்படி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி சொந்த நிலத்திற்கு செல்வதற் கான தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாப்பிலவு இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக மக்கள் ஆரம்பித்திருந்தனர்.எனினும் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் மூன்று மாதங்களை கட ந்தும் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந் தன் கொடுத்த வாக்குறுதியின் கால எல்லையும் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்த வொரு ஆக்கபூர்வமான தீர்வும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.