இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிகமான நோயாளர்களை கொண்டதாக இனங்காணப்பட்டுள்ளது.
தற்போது நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான 6 மாத காலத்தில் 61 ஆயிரத்து 844 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் டெங்கு காய்ச்சலினால் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் இருந்த போதிலும் கொழும்பு, களுத்துறை, கம்பகா மாவட்டங்களில் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணம் அதிக இறப்புகளை கொண்ட மாவட்டமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.