பிரபல சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதாவுடன் தொடர்பினை கொண்டிருந்தமை தொடர்பில் நேற்று மூன்றாவது நாளாகவும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவிடம்
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தினர். கறுப்புப் பணத்தினை சுத்தப்படுத்தும் சட்டத்தின் கீழும், போதைப் பொருள் தடைச் சட்டத்தின் அபாயகரமான ஒளதடங்கள் தொடர்பிலான பிரிவின் கீழும் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் நேற்று மட்டும் அவர் சுமார் 6 மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தபப்ட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரிக்கு தெரிவித்தார்.
இது வரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் சில தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் துமிந்த சில்வாவிடம் இருந்து பெறப்பட்ட வாக்கு மூலத்தையும் முன்னதாக கம்பொல விதானலாகே சமந்த குமார அல்லது வெலே சுதாவிடம் பெறப்பட்டுள்ள வாக்கு மூலத்தையும் ஒப்பிட்டு பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவுள்ளதாகவும் பொலிஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார். இவ்விரண்டு வாக்குமூலங்களையும் ஒப்பிட்டு அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டி உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சாட்சியங்களின் அடிப்படையில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்தகட்ட நகர்வினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுப்பர் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் காலை 9.00 மணிக்கு நன்காம் மாடிக்கு அழைக்கப்பட்ட துமிந்த சில்வா அங்கு வைத்து விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவால் சுமார் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் நேற்று மாலை 5.00 மணியளவில் வெளியேறியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் குரிப்பிட்டன.
முன்னதாக நேற்று முன் தினம் 11 ஆம் திகதியும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிப்னர் ஆர்.துமிந்த சில்வா நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு ஆறு மணி நேரம் விஷேட விசாரணை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டார்.அதனைவிட 10 ஆம் திகதியும் 8 மணி நேரம் அவரிடம் விஷேட விசாரணையொன்ரு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக துமிந்த சில்வா அழைக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட விசரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த விசாரணைகள் அமைந்திருந்ததக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குரிப்பிடுகின்றனர்.
முன்னதாக கடந்த 10 ஆம் திகதி செவ்வாயன்ரு சுமார் 8 மணி நேரம் விஷேட விசாரணைக்கு துமிந்த சில்வா உட்படுத்தப்பட்ட போதும் போதைப் பொருள் தொடர்பில் அவருக்கு உள்ள தொடர்ப்பு குரித்து அன்றைய தினம் விசாரிக்கப்பட்டிருக்கவில்லை என அறியமுடிகின்றது. மாறாக அவரின் சிரு வயதுப் பராயம், இளமைப் பராயம், அரசியல் பிரவேசம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே இதன் போது விசாரிக்கப்ப்ட்டிருந்ததாக குர்றப் புலனாய்வுப் பிரிவின் உள்ளக தகவல்கள் குரிப்பிட்டன. இதனை அடுத்தே நேற்று முன் தினம் முற்பகல் 11.00 மணியளவில் மீன்டும் அழைக்கப்பட்ட துமிந்த சில்வா தொடர்ச்சியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
னேற்று முன் தினம் தனது கே.ஈ.5959 என்ற வெள்ளை நிற ஜீப் ரக வாகனத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு வருகை தந்திருந்த துமிந்த சில்வாவிடம் முக்கியமான இரு விடயங்களை மையப்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்ப்ட்டுள்ளன. இதனை தொடர்ந்தே நேற்றும் அவர் மிகுதி விசாரணைகளுக்காக அழைக்கப்ப்ட்டு நேற்று காலை 8.30 மணி முதல் விசாரிக்கப்ப்ட்டதாக அறியமுடிகின்றது.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனான வெலே சுதா என அறியப்படும் கம்பொல விதானகே சமந்த குமாரவிடம் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது வரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா வெலே சுதா, குடு லாலித உள்ளிட்ட பல போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கும் பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளை செய்துகொடுத்து பெரும் தொகையான பணத்தினை சம்பாதித்து வந்துள்ளமை வெளிப்படுத்தபட்டதை அடுத்து அதற்கான ஆதாரங்களை திரட்ட அவரது வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட விபரங்களை ஆராய நீதிமன்றில் அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் 60 வீதம் வரையில் பூர்த்தியடைந்துள்ளமை குரிப்பிடத்தக்கது. அத்துடன் இது தொடர்பிலான விசாரணைகளில் 80 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்ப்ட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட வெலே சுதா அல்லது சமந்த குமார மீதான விசாரணைகள் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வெலே சுதா மீதான விசாரணைகளை ஒரு மாதகாலத்துக்குள் நிறைவுறுத்த பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட குழுவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந் நிலையில் அந்த விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்து வரும் ஒரு மாததுக்குள் அதனை நிறைவுருத்த பொலிஸ் மா அதிபர் மீண்டும் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.