வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து அதிகாலை 3 மணியளவில் மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தை காலை ஐந்து மணியளவில் மடப்பண்டம் சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து, காலை ஏழு மணியில் இருந்து ஆலயத்தில் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தமது நேர்த்திக்கடன்களை செய்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை தொடக்கம் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து வழிபடுவதில் மக்கள் ஈடுபட்டு வருவதுடன், சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் குறித்த பொங்கல் விழாவிற்கு ஏராளமான பக்த அடியார்கள் வருகைதந்துள்ளனர்.
இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை தொடக்கம் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து வழிபடுவதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை அடியவர்கள் தமது பல்வேறு நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
மேலும் வைகாசி விசாகப் பொங்கல் நாளை அதிகாலை வரைக்கும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.