யாழ்டன் விளையாட்டுக் கழகம் பிரான்சு நடாத்திய உதைபந்தாட்ட – துடுப்பாபட்ட – கரபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் 2017!

0
754


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு ஆதரவில் யாழ்டன் விளையாட்டுக் கழகம் , விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் மேஜர் முரளி அவர்களின் ஞாபகார்த்த 16 வது வருடாந்த 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் மேஜர் அல்பேட் ஞாபகார்த்த 11 வது வருடாந்த 07 பேர் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியும், கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் ஞாபகார்த்த 8 வது வருடாந்த கரபந்தாட்டச் சுற்றுப் போட்டியும், தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வன் பாலச்சந்திரன் நினைவாக 13, 15 வயது சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியும் கடந்த 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பொபினியில் இடம் பெற்றது.


அகவணக்கத்தைத் தொடர்ந்து , 26.12.2007 அன்று நெடுந்தீவு கடற்சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தை மேற்கொண்டார்.  தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடை  பெற்றன


13 வயது உதைபந்தாட்டப் போட்டியில்,
1 ம் இடத்தை யாழ்டன் விளையாட்டுக் கழகம் (நீல அணி) உம்,
2 ம் இடத்தை தமிழர் விளையாட்டுக் கழகம் 93 உம்,
3 ம் இடத்தை யாழ்டன் விளையாட்டுக் கழகம் (வெள்ளை அணி) உம் பெற்றுக் கொண்டன.
சிறந்த விளையாட்டு வீரர்களாக யாழ்டன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த மதுமிலன், தமிழர் விளையாட்டுக் கழகம் 93 ஐ சேர்ந்த பரந்தாமனும், இறுதியாட்ட நாயகனாக யாழ்டன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த றக்சனும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
15 வயது உதைபந்தாட்டப் போட்டியில் ,
1 ம் இடத்தை நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகமும்,
2 ம் இடத்தை யாழ்டன் விளையாட்டுக் கழகமும்,
3 ம் இடத்தை தமிழர் விளையாட்டுக் கழகம் 93 உம் பெற்றுக் கொண்டன.
சிறந்த விளையாட்டு வீரர்களாக நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஜெனோவனும், யாழ்டன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சுஜித்தனும் , இறுதியாட்ட நாயகனாக நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த விபிசனும் பெற்றுக் கொண்டனர்.


வளர்ந்தோர் உதைபந்தாட்டப் போட்டியில்,
1 ம் இடத்தை வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகமும்,
2 ம் இடத்தை யாழ்டன் விளையாட்டுக் கழகமும்.
3 ம் இடத்தை தமிழர் விளையாட்டுக் கழகம் 93 உம் பெற்றுக் கொண்டன.
சிறந்த விளையாட்டு வீரர்களாக யாழ்டன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சஞ்சித், வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சீனிவாசனும், இறுதியாட்ட நாயகனாக வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த றமணனும் தெரிவு செய்யப் பட்டார்கள்.

துடுப்பாட்டப் போட்டியில்,
1 ம் இடத்தை அரியாலை ஐக்கிய கழகமும்,
2 ம் இடத்தை தமிழர் விளையாட்டுக் கழகம் 93 உம்,
3 ம் இடத்தை நண்பர்கள் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.
சிறந்த துடுப்பாட்ட வீரன் மற்றும் சிறந்த தொடராட்ட வீரராக காண்டியும், இறுதியாட்ட நாயகனாக துலா வும், சிறந்த பந்து வீச்சாளராக நிசாந்தனும் தெரிவு செய்யப் பட்டார்கள்.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

கரபந்தாட்டப் போட்டியில்
1 ம் இடத்தை நியூஸ்ரார் விளையாட்டுக் கழகமும்,
2 ம் இடத்தை ஸ்கந்தா விளையாட்டுக் கழகமும்,
3 ம் இடத்தை இணுவில் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.
சிறந்த விளையாட்டு வீரர்களாக நியூ ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கண்டி உம், ஸ்கந்தா விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கஜனும் தெரிவு செய்யப் பட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here