தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது..
இக் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் சிறீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (09) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கடற்பரப்பிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் ;தொண்டமனாறு கடற்கரையை அண்டிய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் நடமாடுவதை அவதானித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த இருவரிடமும் சிறீலங்கா கடற்படையினர் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே இருவரிடமும் இருந்து கேரள கஞ்சாவினை சிறீலங்கா கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவானது 56.5 கிலோ கிராம் நிறையுடையாதக காணப்பட்டதுடன் அவை 2.2 கிலோ கிராம் நிறையுடயைதாக 25 பொதிகளாக பொதியிடப்பட்டிருந்தது என தெரிவிக்க படுகின்றது ..
இவ் கஞ்சா பொதிகளானது இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி கொண்டுவரப்பட்டதாகவும் அவற்றின் மொத்த பெறுமதி ஒரு கோடி இலங்கை ரூபாக்களாக இருக்கலாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.