முல்லைத்தீவு – மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் நேற்று (09) பிற்பகல் 2 மணியளவில் இச் சம்வம் இடம்பெற்றது.
இச் சம்பவத்தில் கிளிநொச்சி, பன்னங்கண்டி – சரஸ்வதி குடியிருப்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான அர்ச்சுனம் முரளிதரன் (வயது – 42) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
“மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் பெட்டியின் சில்லு உடைந்துள்ளது. அதனைச் சீர்செய்வதற்காகப் பெட்டியை மேல் உயர்த்தப்பட்டது. அது ஓர் பக்கம் சரிந்து வீழ்ந்துள்ளது. அதற்குள் சிக்குண்டே குடும்பத்தலைவர் உயிரிழந்தார்” என்று தெரியவருகின்றது ..