ஜெனிவா கூட்டத் தொடரில் திங்­கட்கி­ழமை இலங்கை குறித்து விவாதம்!

0
179

ஜெனி­வா­வில் நடந்து வரும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக் கூட்­டத்­தில், இலங்கை குறித்த அறிக்கை ஒன்று தொடர்­பாக நாளை மறு­தி­னம் திங்­கட்கி­ழமை (12) விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது.
நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர், இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணம் தொடர்­பாக அங்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்கை குறித்தே விவா­திக்­கப்­ப­ட­வுள்ளது.
இலங்கை அர­சின் அழைப்­பின் பேரில், நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ள­ராக இருந்த மோனிகா பின்ரோ கடந்த 2016 ஏப்­ரல் 29ஆம் திகதி முதல் மே 7ஆம் திகதி வரை, இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்டு ஆய்­வு­க­ளைச் செய்­தி­ருந்­தார்.
இது தொடர்பான அறிக்கையை, நீதிபதிகள், மற்றும் சட்டவாளர் களின் சுதந்திரம் தொடர்பான தற்போதைய ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், டியேகோ கார்சியா சயன் திங்கள்கிழமை சபையில் சமர்ப்பிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here