மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சுன்னாகம் தெல்லிப்பழையில் குடிநீருடன் கலந்துள்ள எண்ணெய் மாசு : விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன்

0
388

Ayngaran2104வலி­காமம் பிர­தே­சத்தில் குறிப்­பாக, சுன்­னாகம், தெல்­லிப்­ப­ழை ­ப­கு­தி­களில் உள்ள கிண­றுகள் பல­வற்றில் குடி­தண்­ணீ­ருடன் எண்ணெய் மாசாகக் கலந்­தி­ருப்­பது அப்­ப­குதி மக்­களை வெகு­வாகப் பாதித்­துள்­ளது. அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. கூடவே, எண்ணெய் மாசு வட­மா­காண சபை மீதும் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைக்கும் விட­ய­மா­கவும் ஆகி­யி­ருக்­கி­றது. அந்­த­வ­கையில், கௌரவம் மிக்க இந்தச் சபையில் இது­பற்றிச் சில விட­யங்­களைப் பதிவுசெய்ய விரும்­பு­கிறேன்.

சுன்­னாகம் அனல் மின்­நி­லை­யத்தை அண்­மித்த பகு­தி­களில் உள்ள கிண­று­களில், இலங்கை தர­நிர்­ணய நிறு­வ­கத்தால் குடி­நீரில் இருக்­கலாம் என அனு­ம­திக்­கப்­பட்ட எண்ணெய் மாசின் அள­வை­விட (1 மில்­லி­கிராம்/லீற்றர்) அதிக அளவில் எண்ணெய் மாசாக உள்­ளது என 2012 ஆம் ஆண்டே தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்ப்­ப­குப்பு ஆய்­வு­களில் இருந்து அறியமுடி­கி­றது. இதே கிண­று­களில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை மேற்­கொண்ட ஆய்­வு­க­ளிலும் எண்ணெய் மாசு இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மாசுக்­கான காரணம் நிலத்­தடி நீரில் எண்ணெய் மாசு கலந்­தி­ருப்­ப­தற்கு சுன்­னா­கத்தில் உள்ள அனல் மின்­நி­லை­யமே கார­ண­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது 1958ஆம் ஆண்­டு­முதல் சுன்­னா­கத்தில் அனல் மின்­நி­லையம் இயங்கிவரு­கி­றது. 1. ஆரம்­பத்தில் இலங்கை மின்­சா­ர­ச­பைக்குச் சொந்­த­மான டீசல் அனல் மின்­பி­றப்­பாக்­கியில் இருந்து மின்­சாரம் உற்­பத்தி செய்­யப்­பட்­டது. யுத்­த­கா­லத்தில் விமா­னக்­ குண்டுவீச்சால் சேத­ம­டைந்த எரி­பொருள் தாங்­கியில் இருந்து 1500 கன மீற்­ற­ருக்கும் அதி­க­மான டீசல் வெளி­யே­றி­யுள்­ளது. ஒரு­ப­குதி டீசல் எரிந்­து­போக, பெரும்­ப­குதி அரு­கா­மையில் உள்ள தாழ்­வான குளத்தை நோக்கி வடிந்­தோ­டி­யுள்­ளது. இது ஊர்­மக்­களால் எண்ணெய்க் குளம் என­ அ­ழைக்­கப்­பட்­டுள்­ளது. 2. இதன்­பின்னர் சுன்­னாகம் அனல் மின்நிலைய வளா­கத்தில் 2009ஆம் ஆண்­டு­வரை அக்­றிக்கோ என்னும் நிறு­வ­னத்தால் டீசல் மின்­பி­றப்­பாக்கி மூலம் மின்­சாரம் உற்­பத்தி செய்­யப்­பட்­டது. போர்க்­காலம் என்­பதால் இப்­ப­கு­தி­யினுள் வேறு­ யாரும் சென்றுவர­ மு­டி­யாத நிலையால் சுற்­றாடல் அதி­கா­ரி­களால் எவ்­வித கண்­கா­ணிப்பும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்றே கரு­து­கிறேன். நிலத்­தடி நீரை மாசு­றுத்­தி­யதில் அக்­றிக்கோ நிறு­வ­னத்­துக்கும் பங்கு இருப்­ப­தாக மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையின் 12.11.2014 திக­தி­யிட்ட அறிக்­கையில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

3. அக்­றிக்­கோ­ நி­று­வ­னத்தின் பின்னர் நொதேர்ண் ­பவர் என்ற நிறு­வனம் நீதி­மன்றால் அண்­மையில் இடைக்­கா­லத் ­தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும் ­வரை டீசல் மின்­பி­றப்­பாக்­கி­களின் மூலம் மின் பிறப்­பித்து வந்­துள்­ளது. 2013ஆம் ஆண்டே இந்­நி­று­வ­னத்­துக்கு சுற்­றாடல் பாது­காப்பு அனு­மதி இலங்கை முத­லீட்டுச் சபையால் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையின் ஒப்­பு­த­லுடன் வழங்­கப்­பட்­டுள்­ளது. அது­வ­ரையில் இந்­ நி­று­வ­னமும் சுற்­றாடல் தொடர்­பான அக்­க­றை­யின்­றியே இயங்­கி­யி­ருக்­கின்­றது. ‘அக்­றிக்கோ’ நிறு­வனம் எண்ணெய்க் கழி­வு­களை வெளி­யேற்­றிய இடத்­தி­லேயே இந்­நி­று­வ­னமும் தொடர்ந்து வெளி­யேற்­றி­ வந்­தி­ருக்­கி­றது. அத்­தோடு இந்­நி­று­வ­னத்தின் மின்­பி­றப்­பாக்கி புதி­யது அல்ல. வெளி­நாட்டில் இருந்து பாவித்­த­நி­லை­யி­லேயே தரு­விக்­கப்­பட்­டுள்­ளது. 4. சுன்­னாகம் அனல் மின்­நி­லை­ய­ வ­ளா­கத்தில் 2014ஆம் ஆண்­டு­ முதல் இலங்கை மின்­சா­ர­சபை ‘உத்­துறு ஜனனி’ என்ற மின்­நி­லை­யத்தை இயக்கிவரு­கி­றது. நவீன இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­பத்­து­டன்­ கூ­டிய புதிய மின்­பி­றப்­பாக்கி என்­பதால் இதனால் இது­வ­ரை­யிலும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு எவ்­வித பாதிப்பும் இல்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. வடக்கு மாகா­ண­ச­பையின் நட­வ­டிக்­கைகள் தூய குடிநீர் பெறு­வது ஒரு­வரின் அடிப்­படை மனி­த ­உ­ரி­மை­களில் ஒன்று. அதை வழங்கவேண்­டி­யது அரசின் தார்­மீகக் கடமை. அந்த வகையில், நிலத்­தடி நீரில் எண்ணெய் மாசாகக் கலந்­தி­ருக்கும் இவ்­வி­வ­கா­ரத்தை உரியமுறையில் எதிர் கொண்டு மக்­க­ளுக்குப் பாது­காப்­பான குடி­நீரைக் கிடைக்கச்செய்­ய­ வேண்­டிய பொறுப்பு, இலங்கை மத்­திய அர­சுக்கு மாத்­திரம் அல்­லாமல் வடக்கு மாகாண சபை­யி­ன­ரா­கிய எங்­க­ளுக்கும் உண்டு.

அத­ன­டிப்­ப­டையில், நாம் இது தொடர்­பாக முன்­னெ­டுத்­து­வரும் நட­வ­டிக்­கை­கள்­பற்றிக் குறிப்­பிட விரும்­பு­கிறேன். 1. குடிநீர் விநி­யோகம் – பாதிக்­கப்­பட்ட வலி­. தெற்கு, வலி­. வ­டக்குப் பிர­தே­ச­ ச­பைகள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யிலும் குடி­நீரை விநி­யோ­கித்து வரு­கின்­றன. இப்­பிர­தேச சபை­க­ளுடன் இணைந்து எனது அமைச்­சுக்கு உட்­பட்ட நீர்­வ­ழங்கல் பிரிவின் நீர்த்­தாங்கி வாக­னங்­களின் மூலமும் நீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு­ வ­ரு­கி­றது. மத்­திய அரசின் அனர்த்த முகா­மைத்­துவப் பிரிவும் நீர்­வ­ழங்கல் வடி­காலமைப்பு­ச­பையும் இதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. மரு­தங்­கே­ணியில் அமை­ய­வுள்ள கடல்­நீரைக் குடி­நீ­ராக்கும் திட்­டத்தின் மூலம் பாதிக்­கப்­பட்ட இப்­ப­கு­தி­க­ளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. 2. நிபுணர் குழு – விஞ்­ஞான ஆய்­வு­களின் மூலம் பெறப்­படும் துல்­லி­ய­மான முடி­வு­களே சரி­யான தீர்­வுக்கும், சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கும் அவ­சியம் என்­பதால் வடக்­கு­ மா­காண கௌரவ முத­ல­மைச்­சரின் பணிப்­பின்­பேரில் நிலத்­தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக நிபு­ணர்­கு­ழு­வொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம், கிழக்குப் பல்­க­லைக்­க­ழகம், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழகம், கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் ஆகி­ய­வற்றின் துறைசார் வல்­லு­னர்­களைக் கொண்­டுள்ள இந்­நி­பு­ணர்­குழு எண்ணெய் மாசின் மூலம் அது பரவும் திசை, குடி­நீரில் உள்ள மாசுக்­களின் வகைகள் மற்றும் அள­வுகள், எண்ணெய் மாசு இப்­போதும் பர­வு­மாயின் அதனைத் தடுப்­ப­தற்­கான பொறி­மு­றைகள், எண்ணெய் மாசை இல்­லாமல் செய்­வ­தற்­கான வழி­மு­றைகள் போன்­ற­வற்றைக் கண்­ட­றியும் நோக்கில் ஆய்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இவர்­க­ளது ஆய்­வுக்கு கொழும்பில் இயங்கும் கைத்­தொழில் தொழில்­நுட்ப நிறு­வ­கமும் அனு­ச­ரணை வழங்­கி­வ­ரு­கி­றது. இது இலங்கை மத்­திய அர­சுக்குச் சொந்­த­மான நிறு­வனம் ஆகும். இந்­நி­று­வ­னத்தின் ஆய்­வா­ளர்கள் யாழ்ப்­பாணம் வந்து எமது நிபு­ணர்­கு­ழு­வுடன் இணைந்து நீர்­மா­தி­ரி­களை ஆய்­வுக்­காக எடுத்துச் சென்­றி­ருக்­கின்­றனர். யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் தொண்­ட­மா­னாறில் அமைந்­துள்ள வட­மா­காண நீரியல் ஆய்வு மையத்­திலும் இவ்­வாய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. என்ற ராடார் உப­க­ர­ணத்தைப் பயன்­படுத்தி நிலத்­தின் கீழ் உள்ள எண்­ணெயின் இருப்­பி­டத்தைக் கண்­ட­றி­வ­தற்­காக நேற்று முன்தினம் வட­மா­காண அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஒரு மில்­லியன் ரூபாவை ஒதுக்­கீடு செய்ய ஒப்­புதல் பெறப்­பட்­டுள்­ளது. நீரில் எண்ணெய் கலந்­துள்­ளதா என்­பதை கண்­ட­றி­வ­தற்­கான ஆய்­வுக்குத் தற்­போது 5 மணித்­தி­யாலம் செல­வா­கி­றது. இதைக்­ க­ருத்­தில் ­கொண்டு எண்ணெய் கலந்­துள்­ளதா? இல்­லையா என்­பதை உட­ன­டி­யா­கவே தெரிந்துகொள்­ளக்­கூ­டிய 1.3 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான கரு­வி­ ஒன்று அமெ­ரிக்­காவில் இருந்து உட­ன­டி­யாகத் தரு­விப்­பதற்கு ஏற்­பா­டா­கி­யுள்­ளது. புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் உற­வுகள் அன்­ப­ளிப்­பாக இதனை வழங்க உள்­ளனர்.

சுன்­னாகம் அனல் மின்­நி­லையம் தவிர்ந்த வேறு கார­ணி­களும் எண்ணெய் மாசுக்குக் கார­ண­மாக அமைந்­துள்­ள­னவா என்­பது தொடர்­பிலும் நிபு­ணர்­குழு கவனம் செலுத்தும். ஆய்­வுகள் யாவும் விரைந்து மேற்­கொள்­ளப்­பட்டு ஆய்­வ­றிக்கை ஒரு­மா­த ­கா­லத்­தினுள் சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 3. தூய குடி­நீ­ருக்­கான செய­லணி – மாகா­ண­சபை தனித்து இயங்­காமல் மத்­திய அரசின் துறை­களும் இணைந்து செயற்­பட்­டாலே தீர்­வினை விரைந்து எட்­ட­மு­டியும் என்­பதால் அனைத்துத் தரப்­பி­ன­ரையும் உள்­ள­டக்கி வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் மற்றும் விவ­சாய அமைச்­சரின் இணைத் ­தலை­மையின் கீழும் யாழ். ­மா­வட்ட அர­சாங்க அதி­பரின் துணைத்­த­லை­மையின் கீழும் தூய குடி­நீ­ருக்­கான செய­ல­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இச்­செ­ய­லணி வாராந்தம் ஒன்­று­கூடி இது­வ­ரையில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் ­பற்றி மீளாய்வு செய்­வ­தோடு, அடுத்து எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கை­கள்­ பற்­றியும் தீர்­மா­னிக்­கி­றது.

வடக்கு மாகாண சபை எதிர்­கொள்ளும் சவால்கள் 1. நிலத்­தடி நீரில் எண்ணெய் மாசு என்­பது வடக்­குக்கு மாத்­திரம் அல்ல, இலங்­கைக்கே இது­வ­ரையில் முன்­னு­தா­ரணம் அற்ற ஒரு அனர்த்தம் என்­பதால் இதனை எதிர்கொள்­வதில் சில தடங்­கல்­களும் தயக்­கங்­களும் நில­வு­கின்­றன. இதனால், பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை அடை­யாளம் கண்டு செயற்­ப­டுத்­து­வதில் காலதாமதம் ஏற்­ப­டு­கி­றது. 2. குடி­நீரில் எண்ணெய் மாசு தொடர்­பாக விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்றும் விரைந்து நட­வ­டிக்­கை­களை எடுக்கக் கோரியும் பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்­களும், மருத்­து­வர்­களும் கவ­ன­யீர்ப்பு நிகழ்வு­களை தூய­நோக்­கோடு ஏற்­பாடுசெய்து வந்­துள்­ளனர். இது அவ­சி­ய­மா­ன­தும்­ கூட. ஆனால், இந்த ஜன­நா­யக வாய்ப்பைப் பயன்படுத்தி பிரச்சினையின் பரிமாணத்தை மிகப் பன்மடங்காக உருப்பெருப்பித்து சுய இலாபம் பெறப் பல்வேறு சக்திகளும் களம் இறங்கியுள்ளன

இவற்றில் சில குடிநீர் வணி­க ­நி­று­வ­னங்­களும் இர­ணை­மடுத் தண்­ணீரை யாழ்ப்­பா­ணத்­துக்குக் கொண்­டு­வர வேண்டும் என்று எப்­பா­டு­பட்­டா­வது யாழ்ப்­பாண மக்­களால் கோரிக்கை முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும் என்று படா­த­பா­டு­பட்­ட­வர்­களும், வட­மாகாண சபைக்கு எதி­ராக மக்­களைத் திசை­ தி­ருப்­ப­வேண்டும் என்று காத்துக் கிடப்­ப­வர்­களும் அடங்­கு­கின்­றனர். இவர்­க­ளது பரப்­பு­ரையால் மக்கள் பதற்றநிலைக்கு இட்டுச் செல்­லப்­பட்டுக் கிணற்றில் மிதக்கும் தூசிப்­ப­ட­லத்­தை­யும்­கூட எண்ணெய் என்று நம்பிக் குடி­நீ­ருக்கு அலையும் பரி­தாப சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது ஆய்வின் செல்­தி­சையைக் குழப்­பு­வ­தாக அமை­வ­தோடு, உண்­மை­யாக எண்ணெய் மாசினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு எங்­களால் போதிய கவனம் செலுத்தமுடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­து­கி­றது என்­ப­தையும் வருத்­தத்­துடன் இங்கு பதிவுசெய்து, எல்லாத் தடங்­கல்­க­ளையும் தாண்டி இக்­கு­டி­நீர்ப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்தரத் தீர்வு விரைவில் எட்டப்படும் என்று உறுதிகூறுகின்றேன் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here