லண்டன் தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்த சவுதி அணி மறுப்பு!

0
459

லண்டன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவுதி கால்பந்து அணி அஞ்சலி செலுத்தாதன் காரணத்தை அதன் நிர்வாகம் விளக்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற சவுதி அரேபியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கிண்ண கால்பந்து தகுதி ஆட்டத்தில், லண்டன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சவுதி அணி பங்கேற்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சவுதி கால்பந்து அணியின் நிர்வாகிகள் குறித்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.
அதில் சவுதி அரேபிய கலாசாரத்தில் அஞ்சலி செலுத்தும் முறை இல்லை என்பதாலையே சவுதி அணி, குறித்த நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள சமூக வலைதள பயன்பாட்டாளர்கள், சவுதி அணி இதற்கு முன்னர் அஞ்சலி செலுத்திய புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி அளித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற சவுதி மற்றும் ஜேர்மனி அணிகளுக்கு இடையேயான ஹேண்ட்பால் உலக சாம்பியன்ஷிப் ஆட்டத்தின்போது அப்போதைய அரசர் அப்துல்லா காலமானதற்கு சவுதி அணி அஞ்சலி செலுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டுமின்றி சவுதி மற்றும் அவுஸ்திரேலிய கால்பந்து அணிகள் குறித்த நிகழ்வுக்கு ஒப்புதல் அளித்த பின்னரே அஞ்சலிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் கடைசி நிமிடத்தில் சவுதி அணி பங்கேற்க மறுப்பு தெரிவித்ததன் காரணத்தை அந்த அணி விளக்க மறுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here