சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை குற்றவியல் விசாரணை அமைப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 24 வயது இளைஞர் ஒருவரை குற்றவியல் விசாரணை அமைப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் பாஸல் பகுதியில் குடிபெயர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனிடையே குற்றவியல் விசாரணை அமைப்பு பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பாஸல் பகுதியில் வெடிகுண்டு அல்லது நச்சு வாயு பயன்படுத்தி தாக்குதல் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
குறித்த பகுதியில் தாக்குதல் நடத்த கைதான இளைஞரே மூளையாக செயல்பட வாய்ப்பிருந்ததாகவும் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே பாஸல் மற்றும் Solothurn பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறையினருக்கு கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.