
இதனையடுத்து, தீ அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விரைவாக பரவியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தன. இந்த பயங்கர விபத்தில் 22 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மேலும், பலர் பலத்த படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.