ஈரான் பாராளுமன்ற கட்டடம் மற்றும் ஈரானின் மதத் தலைவர் ஆயத்துல்லா கொமைனியின் அடக்கஸ்தலம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் இது வரை 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாராளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்த இனம் தெரியாத நால்வர் பாராளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தோர் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கட்டடத்தின் நான்காம் மாடியில் தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலை பெண் ஒருவர் நிகழ்த்தியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல்தாரிகளால், நால்வர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேலும் நான்கு தாக்குதல்தாரிகள், மறைந்த ஈரானின் மதத் தலைவரான ஆயதுல்லா கொமைனியின் அடக்கஸ்தம் அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, குறித்த பகுதியில் விசேட தீவிரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் .
குறித்த தாக்குதல் தொடர்பில், இது வரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.