99 நாட்களாக தொடரும் காணி மீட்பு போராட்டம் ! சிறீலங்கா இராணுவமே தடை !

0
257

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ள போதிலும், ஆக்கிரமிப்பு இராணுவமே அதற்கு தடையாக உள்ளதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களது போராட்டத்திற்கு தம்முடைய ஆதரவு எப்போதும் இருக்குமென முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்களின் காணி விடுவிப்பு கோரிய அறவழிப் போராட்டம் இன்றுடன் (07.06.2017) 99 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக அம்மக்களுக்கு வடக்கு மக்கள் அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாவிரதத்தில் அல்லது வேறு ஏதாவது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மக்கள் மீது இராணுவம் பரிவு காட்டும் என எதிர்பார்க்க முடியாதென குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர், மக்களை அவ்வாறான பொருந்தாத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here