

இந்த உற்சவத்தின் முன் நிகழ்வான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு நேற்று தீர்த்தக்கரையிலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சிறப்புற இடம்பெற்றது. தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டு விநாயகர் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளக்கேற்றப்படும்.

தொடர்ந்து எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடையும். பின்னர் அங்கு பொங்கல் உற்சவம் சிறப்புற இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.