கத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் செளதி, எகிப்து!

0
282

கத்தார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் செளதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கத்தார் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமை மூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி, கத்தாருடனான தங்கள் ராஜிய உறவுகளை பல நாடுகள் துண்டித்துவிட்டன.

பஹ்ரைன், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள கத்தார் நாட்டினர் இரண்டு வாரங்களில் அந்நாடுகளிலி்ருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுக்கிறது; “வெளிப்படைத்தன்னையுடனும் நேர்மையுடனுமான பேச்சுவார்த்தைகளுக்கு“ பிற நாடுகளை கத்தார் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியிலிருந்து, மறு அறிவிப்பு வரும்வரை, எகிப்து வான்பரப்பு கத்தார் விமான சேவைகளுக்கு மூடப்படும் என எகிப்து தெரிவித்துள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்துகளை இணைக்கும் முக்கிய தளமாக கத்தாரின் தலைநகர் டோஹா இருப்பதால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here