புகலிடக் கோரிக்கையாளர்களின் இரண்டு படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கியதில் 200 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது.
நான்கு நாள் கடற்பயணத்தின் பின்னர் படகுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 9 பேர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், 203 பேர் வரையில் நீரில் மூழ்கிப்போயுள்ளதாக இத்தாலியின் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகத்தின் பேச்சாளர் கர்லொற்றா சமி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இரண்டு படகுகளில் ஒன்று திங்கட்கிழமை கவிழ்ந்ததில் 29 புகலிடக் கோரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குறித்த படகில் 100 பேர் வரையில் பயணித்துள்ளதாக IOM நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் லம்பேடுசா பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காப்பாற்றப்பட்ட 9 பேரும் பிரெஞ்சு மொழியில் பேசுவதாகவும் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து இவர்கள் கடற்பயணத்தை ஆரம்பித்திருக்கக் கூடும் என தாம் நம்புவதாகவும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.