
மூழ்கிய இருவரையும் கண்ணுற்ற கிராம மக்கள் அவர்களை உடனடியாக மீட்டு தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின் அங்கிருந்து நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் வழியில் மகன் மரணமடைந்ததுடன் தந்தையார் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மயில்வாகனபுரம் புன்னை நிராவியைச் சேர்ந்த உதயகுமார் குமரன் (வயது 19) என்ற இளைஞனே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
இளைஞரின் சடலம் பிரேத மற்றும் மரண விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.