பிரான்சு பாரிசில் தமிழ்மொழி பொதுத் தேர்வு தற்போது சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது!

0
262

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் பிரான்சில் நடாத்தப்படும் தமிழ்மொழி பொதுத்தேர்வு தற்போது சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
ஏற்பாட்டாளர்கள் முன்னிலையில் அகவணக்கத்தைத் தொடர்ந்து, வினாத்தாள்கள் தேர்வு நடத்துநர்கள் மற்றும் மாணவர்களால் கையொப்பமிடப்பட்டு தேர்வு
வழமைபோன்று இம்முறையும் பிரான்சு அரச தேர்வு மண்டபத்தில் (Maison des examens 7 Rue Ernest Renan, 94110 Arcueil) பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் வெளியில் காத்திருக்க வெளிநாட்டவர்கள் என்ன நடக்கின்றது என்று அதிசயிக்கும் அளவிற்கு தேர்வு மண்டபத்தை சூழ காணும் இடமெல்லாம் எம் தமிழ் மக்கள் அலையெனத் திரண்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் காணப்படுகின்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அதன் உபகட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் தமது தேர்வுக் கடமையை சிறப்பாக நடாத்துவதைக் காணமுடிந்தது.
மண்டபத்தினுள்ள தமிழ்ச்சோலை பள்ளி ஆசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் தமது கடமைகளை திறப்பட நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.
RER B தொடருந்தில்  தமிழ் மக்களே பெரும் எண்ணிக்கையில் தேர்வு மண்டபப் பகுதியில் வந்து இறங்குவதைக் காணமுடிந்தது.

பிரான்சில் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் புற மாவட்டங்களிலுமாக மொத்தம் 5 ஆயிரத்து 938 மாணவர்கள்  இம்முறை தேர்வுக்குத் தோற்றவுள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்
மேலதிக தகவல்கள் பின்னர் தரப்படும்.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here