வடமாகாண சபைத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது-ராஜித சேனாரட்ன

0
104

rajithaaஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச் சருமான  ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப் பட்டார்கள் என்பது அனைவ ரும் அறிந்தவிடயம். அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப் படுகொலை என்று சொல்ல முடியாது என்று அமைச்சர் கூறினார்.

இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வட மாகாண முதல்வரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். கடந்த முறை இதேதீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் இப்போது எப்படி அதை ஏற்றார் எனவும் அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது.

போர் முடிந்த பின்னர் எந்த தமிழ் அரசியல் தலைவரும் இனப்படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை எனக் கூறும் அமைச்சர், இனப்படுகொலை என்று கூறி இயற்றப்பட்டுள்ள வட மாகாண சபையின் தீரமானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித் துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here