மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் அவரது நீதிமன்றக் காவல் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 இல் சிறீலங்கா அரசு அனைத்துலக அனுசரணையுடன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழரிற்காக ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தினர் சென்னை மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு அந் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டதால், கடந்த 21-ஆம் தேதி மே 17 இயக்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்தனர். அப்போது அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்த நிலையில் இந்திய எண்ணை நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக திருமுருகன்காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் காவலை வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது.