காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டி கண்டாவளை பிரதேச செயலக மக்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நேற்று முன்னெடுத்தனர்.
5 வருடங்கள் ஏமாந்தது போதும். காணி உரிமம் வீதி புனரமைப்பு வீட்டத்திட்டம் மின்சாரம் போன்றவற்றை இழுத்தடிப்பது ஏன் என்ற கருத்தினாலான பதாதைகளை ஏந்தியவண்ணம் குறித்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.