ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2017 கிராமிய நடனப்போட்டி! ( இரண்டாம் இணைப்பு )

0
1419

மண்ணின் கலைகளை நாம்முன்னின்று வளர்ப்போம் ஆற்றுகையால் எண்ணங்களை வென்றெடுப்போம் என்ற வாசகத்துடன் ரிரிஎன் தமிழ் ஒளி இரண்டாவது தடவையாக நடாத்தும் ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2017 இற்கான கிராமிய நடனப்போட்டி நிகழ்வு  27.05.2017 சனிக்கழமை பிரான்சு  Bondy நகரப் பகுதியில் பிரமாண்டமான மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

 
எமது மண்ணின் கலை வடிவம் 
தாய் நிலத்தில் எம் வாழ்வோடு இணைந்த கலையின்  தேடல்கள், வித்துவங்களின் நிறைவுமாக அரங்கம் நிறைந்த  மக்களின் ஒன்றுபட்ட  பாராட்டுக்களுடன் 38 நடனக் குழுக்கள் கலந்து 
 நிறைவு கண்டுள்ளது. 27.05.2017  காலை 11.15 மணியளவில் 
இன்னிய இசையாடலோடு அனைத்து துறை சார்ந்தவர்களால் பொண்டி (bondy) மாநகர  முதல்வர்  திருமதி .செல்வின் தோமசன்  அவர்கள் மற்றும் துணை மாநாகர சபை முதல்வர் திரு. சாலி மோனயா பிரதம விருந்தினர்கள், நடுவர்கள், ஆசிரிய4ர்கள், போட்டியாளர்கள்  அழைத்துவரப்பட்டனர்.  மண்டபம் நிறைந்த மக்கள்   தாய் மண்ணின் கலையை வழங்க ஆசிரியர்கள் மாணவர்கள் பணியாளர்கள் யாவரும் எம் மண்ணுக்காய் தம் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும்,நாட்டுப் பற்றாளர்கள் பொதுமக்களுக்குமாக அக  வணக்கம் செலுத்தினர் அதனைத் தொடர்ந்து பொண்டி (bondy) நகர முதல்வர் திருமதி .செல்வின் தோமசன்..அவர்களோடு  துணை மேயர் சாலி மோனயா, அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.சந்தோஸ், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ் பொண்டி (bondy) பிராங்கோ தமிழ்சங்கத் தலைவர் திரு. கலைச்செல்வன் தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் மற்றும் 
 
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உபகட்டமைப்புக்களின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின்  மேலாளர்,தமிழ்ச்சோலைத்தலைமைப் பணியகப் பொறுப்பாளர்  என அனைவரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர் தொடர்ந்து Bondy மேயர் திருமதி செல்வின் தோம்சன்.    ( நகர முதல்வர்.)அவர்களுக்கு  bondy தமிழ் சங்க பொறுப்பாளர் பொன்னாடை போர்த்து பூக் கொத்தும் வழங்கி மதிப்பளித்தார் .தொடர்ந்து பொண்டி (bondy) மேயர் திருமதி .செல்வின் தோமசன், துணை மேயர் சாலி மோனயா ஆகியோர் குறித்த நிகழ்வு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தமிழர்கள் தமது தாய் மொழியில் மட்டுமல்ல தமது கலையையும் நிலை நிறுத்தி வருபவர்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஓர் எடுத்துக் காட்டு எனவும்  குறிப்பிட்டிருந்தனர்.இதனைத் தொடர்ந்து ஊரகப் பேரொளி 2017 இற்கான பாடல் கானொலியில் காண்மிக்கப்பட்டது.
 
முதன்மைச் சிறப்பாளராக
திருமதி மதிவதனி சுதாகர் (முதுகலை மாணி) திருக்கோணேஸ்வரர் நடனாலயம் – சுவிற்சர்லாந்து)
நடுவர்களாக
திருமதி சாமினி சந்திரகுமார் (நாட்டியக் கலைமாணி, கலைமாணி B.A) யாழ்.வண்ணை நாட்டியப்பள்ளி – லண்டன்)
திருமதி யாழினி பாலேந்திரன் (பரதக்; கலைமாணி, முதுமாணி M.A) நித்திய சதங்கி நர்த்தனாலயா – டென்மார்க், நோர்வே)
திருமதி மாலதி யோகேந்திரன் (நாட்டியக் கலைமாமணி) சிவாஞ்சலி நர்த்தனாலயா – நோர்வே)
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பொறுப்பாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் நடுவர்களை  பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார் மேலும் உலகெங்கும் ஊரகப்பேரொளி எனும் மண்ணின் கலைவடிவம் சென்றிடவேண்டும் எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது   மேலும்  கவிஞர் பன்முக கலைஞர்  புலத்தூர் சுந்தரம் அவர்களின் அறிமுக உரையில் .
 இவ்வாறான மண்ணின் கலைகளான   ஆடற்  போட்டிகள் நிகழ்வது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஆனால் ttn  தமிழ் தொலைக்காட்சி இவ்வாறான ஒரு பணியை மேற்கொள்வது பாராட்டத்தக்க விடயம்.  இந்நிகழ்வுகள் புலம்பெயர் மண்ணில் தொடர்ந்தும்  நிகழவேண்டும் என்பதே எனது பேரவா. இந்த கலை  படைப்புக்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் கலைஞர்களையும் வாழ்த்துகின்றேன் என உணர்வுபொங்கத் தெரிவித்தார்.நிகழ்வு இனிதாகவும் நிறைவாகவும் நிகழும் என்ற  திடமான பேச்சுக்கு பார்வையியாளர்களிடம் இருந்து எழுந்த   கரவொலி சக்தி  கொடுப்பதாக காணப்பட்டது . 
தொடர்ந்து நடுவண்பிரிவு போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றன. தொகுப்பாளர்களான குருபரன். ரூபி, பார்த்திபனின் தொகுப்பில் இனிதாக நடுவண் பிரிவு விறுவிறுப்பாக அரங்கம் நிறைந்த மக்களுடன் நிறைவு பெற்றபோது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் சத்திய தாசன் ஆசிரியர் பண்பாடு கூறும் எம் கலையை எம் பிள்ளைகள் கையிலெடுப்பார்கள் என்றும் இன்றைய சூழலில் உள்ள கடமைப்பாட்டையும் உணர்த்திக் சென்றார் அவரைத்தொடர்ந்து அனைத்துலக தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் கூறுகையில்  இச்செயற்பாடுப்பாடு அளப்பெரிய பணியாகும் இந்த செயற்பாடு  தொடர்ந்தும் நடைபெறுதல் அவசியமாகும் என்றவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்    இடைவேளையைத் தொடர்ந்து கீழ்ப்பிரிவு போட்டிகள்  ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றன. குறித்த போட்டிகளில்  எம் சிறார்கள்  தமது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு குழுவின் ஆற்றுகை முடிவிலும் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.  சிறப்பு நிகழ்வாக  ஊரகப்பேரொளி பாடலை உருவாக்கிய கலைஞர்கள் மற்றும்
அண்மையில் ரிரிஎன் தயாரிப்பில் வெளியிடப்பட்ட மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் நினைவுப்பாடல் உருவாக்கிய கலைஞர்களும் ,மதிப்பளிப்பு செய்யப்பட்டனர். குறித்த மதிப்பளிப்பினை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்கள் வழங்கிவைத்தார்.
தொடர்ந்து எமது நிகழ்விற்கு ஆதரவினை வழங்கிய ஊடகங்கள்  தாய் மண்ணினை நேசித்து மக்களுக்கான கடமைப்பாட்டினை புரிந்து  .தொடர்ச்சியாகவும்  தாயகம் நோக்கிய பணிகளை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன்  . எம்  ஊடகவியலாளர்களை  தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் திரு.விஸ்வநாதன் அவர்கள்  மதிப்பளித்தார்.இதன் தொகுப்பை எமது அறிவிப்பாளர்.திருமதி கவிதாஅவர்கள் தொகுத்து வழங்கினார்  
இந்நிகழ்வில் ஊரகப்பேரொளி நினைவு சுமந்த சிறப்பு நூல் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெளியிட்டுவைக்கப்பட்டது. ஊரகநினைவுகளும்,எமது நிகழ்வுகளிற்கு பேராதரவு அளித்த வர்தகர்களின் விளம்பரங்களையும் தாங்கிய  நூலின் முதற்பிரதியை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனைப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வெளியிட்டுவைக்க தொழிலதிபர்  திரு.பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்   சிறப்பு விருந்தினர்கள், ஒவ்வொரு கட்டமைப்பைச் சேர்ந்தபிரதிநிதிகள் ஒவ்வொருவராக நூலினைப் பெற்று சிறப்பித்தனர்  
 
ஊரகப் பேரொளி 2017 வெற்றியாரத்தை வடிவமைத்தவர் ஈழத்துக் கலைஞர் ஓவியர் திரு இலங்கைநாதன் ஆவார்
ஊரகப் பேரொளி வெற்றியாரம் 2017 பெறப்போகின்றவர்  யார் என்ற கேள்விகளோடு 
மேற்பிரிவு போட்டிகள் ஆரம்பித்தன கண்கள் களைத்தாலும் சிந்தை மாறாது மெய்சிலிர்க்க வைத்தன நிகழ்வுகள்.  மண்ணின் கலைகளை நாம்முன்னின்று வளர்ப்போம் ஆற்றுகையால் எண்ணங்களை வென்றெடுப்போம் என்ற ttn  இன்  எண்ணத்துக்கு வலுச்  சேர்த்தது   2017  ஊரகப் பேரொளி என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
  ஊரகக் கலைகளை நேர்த்தியாக  நெறிப்படுத்திய அனைத்து  ஆசிரியர்களுக்கும்  அனைத்துலக கல்விமேம்பாட்டுப் பேரவைப்  பொறுப்பாளர்  திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனைப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் ஆகியோர்  மதிப்பளித்தனர் 
தொடர்ந்து சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், மாணவ மாணவிகளையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டியதுடன், இவ்வாறான ஏனைய நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதேவேளை, ரிரிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் முக்கியத்துவம் பற்றியும் அத்துடன் ஏனைய தமிழ் தேசிய ஊடகங்களையும் ஊக்குவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வின் நடுவர்கள் அரங்கு நிறைந்த கரவொலிக்கு  மத்தியில்  பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களால்  மதிப்பளிக்கப்பட்டனர். முதன்மைச் சிறப்பாளர் திருமதி மதிவதனி சுதாகர்அவர்கள் தமது உணர்வைப் பகிர்கையில்   பரதத்தைப் பார்த்த எமக்கு குறித்த கிராமிய நடன நிகழ்வுகள் மிக மாறு பட்டவையாகவும்   உற்சாகமாகவும்  இருந்தன. தான் வாழும் நாட்டிலும்  இந்த கலைவடிவம் அரங்கேற வேண்டும் என ஆசைப்படுவதாகவும்  மாணவர்கள் மிகவும் திறமையாக நிகழ்வுகளைப்படைத்திருந்தனர். இதில் கலந்துகொள்ள எமக்கு ஒருவாய்ப்பை வழங்கிய ரிரிஎன் தமிழ் தொலைக்காட்சிக்கு சிறப்பாளர்கள் சார்பில்  எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
ஊரகப்பேரொளி வெற்றியாராம்  2017  க்காக முன்னின்று உழைத்தவர்களுக்கும்    ஊக்கமும் ஆற்றலும் தந்த அனைவருக்கும் ரிரிஎன் தமிழ் தொலைக்காட்சி சார்பில்  திரு.கணேஸ்தம்பையா அவர்கள் நன்றி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பரிசளிப்பினை கல்வி மேம்பாட்டுப் பேரவை பொறுப்பாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனைப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமார், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு. பாலக்குமாரன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா, ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சியின்  பணிப்பாளர் திரு.ரூபன் ஆகியோர் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
ஒவ்வொரு பிரிவுகளின் வெற்றியாளர்களையும் திரையில் காண்பிக்கப்பட்டது மிகவும் சிறப்பாக காணப்பட்டது  
நடுவண் பிரிவு
முதலாம் இடம்: குசான்வில் தமிழ்ச்சோலை
இரண்டாம் இடம்: சேர்ஜி தமிழ்ச்சோலை
மூன்றாம் இடம்: ஆர்ஜெந்தை தமிழ்ச்சோலை
 
கீழ்ப்பிரிவு
முதலாம் இடம்: குசான்வில் தமிழ்ச்சோலை
இரண்டாம் இடம்: அபிராமி நாட்டியப் பள்ளி
மூன்றாம் இடம்: சுவாசிலிரூபா தமிழ்ச்சோலை
 
மேற்பிரிவு
இரண்டாம் இடம்:குசான்வில் தமிழ்ச்சோலை
மூன்றாம் இடம்: திரான்சி தமிழ்ச்சோலை
தொடர்ந்து ஊரகப்பேரொளி – 2017 வெற்றியாரத்தை  சோதியா கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் தமதாக்கிக்கொண்டனர். குறித்த வெற்றியாரத்தை ரிரிஎன் தமிழ்ஒளி பணிப்பாளர் திரு.ரூபன் அவர்கள் மண்டபம் அதிர்ந்த கரவொலியின் மத்தியில் வழங்கியிருந்தார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து  தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் 
நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு கண்டன.
TTN தமிழ் ஒளி செய்திப் பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here