சிறீலங்கா ஆக்கிரமிப்புப்படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் உண்மை நிலைமையை வெளிப்படுத்துமாறு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது.
இன்று வீதிமறியல் போராட்டத்திற்கு பொது அமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிரகா சிறீலங்கா காவல்துறையினர் நீதி மன்றத்தில் தடை உத்தரவை கோரி இருந்தனர். வீதி மறியல் போராட்டத்திற்கு தடை விதித்த நீதிபதி, மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட அனுமதித்தானர். இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டதுடன், மக்களை அச்சுறுத்தும் வகையில் படப்பிடிப்பையும் மேற்கொண்டனர்.
100 வது நாள இன்றைய போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் வந்து தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.