வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்த தாழுமுக்க நிலை மோரா சுழல் காற்றாக மாற்றமடைந்து இலங்கையிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டிற்கு குறுக்காக வானம் முழுவதும் முகில் நிறைந்ததாக காணப்படும் என்பதோடு, மழை மற்றும் காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வட மேல், மத்திய மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இம்மழை சுமார் 100 மில்லி மீற்றர் வரை பெய்யலாம் எனவும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு மலைப்பகுதிகளில் இவ்வாறு பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் வடக்கு மற்றும் வட மத்திய மாகணங்கள் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.