நாட்டின் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 250 ஐ தாண்டியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட் டுள்ளது.
நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களில் சிலர் சடலங்களாக மீட்கப்பட்டு வருவதையடுத்தே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக கூறப்படு கின்றது.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களிலும், இதுவரையில் 151 பேர் பலியாகியும், 111 பேர் காணாமல் போனதாகவும் உத்தியோகபூர்வ தகவல்கள் பதிவாகியிருப்பதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டத் தில் 47 மரணங்கள் உள்ளிட்ட 50 மரணங்களும் 62 பேர் காணாமல் போயுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.48 சத வீதமான மரணங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அதாவது இரத்தினபுரி மாவட்டத்தில் 71 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காணாமல் போயுள்ளனர் கேகாலை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தும் மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.
மாத்தறை, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர்;. 27 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் இறு தியாக வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக கூறப்படும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது நிலச்சரிவுகளில் புதையுண்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் 4-வது நாளாகவும் நேற்று தொடர்ந்திருந்தது