சின்னமணி என்று அனைவராலும் அறியப்பட்ட வில்லிசை மாமன்னன் நா.கணபதிப்பிள்ளை அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி தமிழ் உலகத் திற்குப் பேரிழப்பைத் தருவதாகும்.
வில்லிசைக் கலையை தமிழ் உறவுகள் வாழும் நாடெங்கும் பரப்பிய பெருமை சின்னமணியையே சாரும். ஓர் ஒப்பற்ற கலைஞன். மக்களின் மனம் அறிந்து வில்லிசைக் கலையை மக்கள் மயப்படுத் திய மாமேதை. இன்று நம்மோடு இல்லை என்ற துய ரத்தோடு நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்த வேளையில்,
முப்பது வருடங்களுக்கு முற்பட்ட நினைவுகள் இவை. கோயில் திருவிழாவுக்கு அடியார்களை வர வழைப்பதற்காக கலைநிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத் துவதில் திருவிழா உபயகாரர்கள் கடும் போட்டியிடுவர். தவில் நாதஸ்வரக் கச்சேரிகள், புகழ்பெற்ற நாடகங்கள், வில்லிசை இப்படியாக அந்தக் கலை நிகழ்வு கள் அமைந்திருக்கும்.
ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனம் ஊர் எல் லாம் ஓடிச் செல்லும். அடியார்களே! என்ற விளிப்போடு இரவுத் திருவிழாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படும்.
அந்தக் கலை நிகழ்வில் கலாவிநோதன் சின்ன மணியின் வில்லிசை என்ற அறிவிப்பு உற்சாகத்து டன் வெளிப்படுத்தப்படும்.
ஊர் கூடி இரவுத்திருவிழாவுக்கு செல்வதென்று முடிவு செய்யும். கோயிலின் முகப்பு அரங்கில் சிரித்த முகத்துடன் சின்னமணி,
…பாடறியோம்… படிப்பறியோம்… ஏடறியோம்…
எழுத்தறியோம்… கணீர் என்ற குரலிசையில் வில்லிசை ஆரம்பமாகும்.
அங்க அசைவு; சோகத்திற்கு அழுகை; மகிழ்ச்சி க்குச் சிரிப்பு… எந்தக் கதையைக் கூறவந்தாரோ அந்தக் கதையின் பாத்திரமாக அவர் தன்னை மாற் றிக் கொள்வார்.
சின்னமணியின் வில்லிசையை பின்பற்றி மாணவர்கள் பள்ளிகள் தோறும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அரங்கேற்றுவர். கிராமத்துச் சிறுவர் கள் தங்கள் பொழுதுபோக்கு நிகழ்வாக வில்லிசைப்பார்கள்.
இப்படியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிலும் வில்லிசை என்ற கலையை ஊட்டி விட்ட பெருமை கலாபூசணம் கணபதிப்பிள்ளை அவர்களையே சாரும்.
சின்னமணி போன்ற ஒரு வில்லிசைக் கலைஞன் இந்த உலகில் எங்கும் இல்லை என்ற பெருமை எங் கள் மண்ணுக்கு உண்டு.
எல்லாக் கலைகளிலும் தமிழகம் தனக்கு ஒப் பாரும் மிக்காரும் இல்லாத கலைஞர்களை தன்ன கத்தே கொண்டுள்ளது. ஆனால் வில்லிசையில் மட்டும் ஈழம் தன்னிகரில்லா கலைஞரை வைத்திருந் தது என்று கூறும் போது, சின்னமணி என்ற நாமத் தின் உச்சரிப்பு எங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளும்.
அந்த புகழ்பூத்த வில்லிசை மாமேதை இன்று மீளாத்துயிலில். சின்னமணியின் வில்லிசையில் விழுந்து உழன்று சிரித்து இன்புற்ற உள்ளங்கள் அவரின் இழப்பால் நிச்சயம் கண்ணீர் சிந்தும்.
சின்னமணியின் மறைவு, ஈழத்தமிழர்கள் சிரிப் பதற்கான சந்தர்ப்பங்களை இறைவன் மட்டுப்படுத் தியுள்ளான் என்ற நினைப்பையே தருகிறது.
தமிழ் உறவுகள் வாழும் நாடெங்கும் சென்று வில்லிசையால் ஈழத்தமிழினத்தின் புகழ் பரப்பிய மாமேதையே போய்வா. உரிமையில்லா இந்த சிறு பான்மை இனம் இதைவிட வேறு எதைத்தான் சொல்ல முடியும்? ஆனாலும் ஒன்றை மட்டும் இவ் விடத்தில் கூறுவோம். தமிழினத்தின் தன்னாட்சியில் கணபதிப்பிள்ளை என்ற வில்லிசை மாமேதையின் வரலாறு பதிவாகி, பாடமாகி, கலையாகி நிலைபெறும். இது சத்தியம். [mom_video type=”youtube” id=”/6CK-z4YFXTw”]
[mom_video type=”youtube” id=”/hl4A_FKNyes”]
[mom_video type=”youtube” id=”/c5u3xUKw82I”]
[mom_video type=”youtube” id=”/UogpIAtT8zc”]
[mom_video type=”youtube” id=”/ah5SfXXYiM8″]