‘தமி­ழ­கத்தில் “முக­மூடி முதல்வர்” “ரிமோட் கண்ட்ரோல்” ஆட்சி: கரு­ணா­நிதி பரி­காசம்!

0
151

கருணாநிதி1‘தமி­ழ­கத்தில் “முக­மூடி முதல்வர்” ஒருவர் தலை­மையில் “ரிமோட் கண்ட்ரோல்” ஆட்சி நடை­பெற்று வரு­வ­தாக அல்­லவா அனை­வரும் பேசிக் கொள்­கி­றார்கள்’ என்று தி.மு.க. தலைவர் கரு­ணா­நிதி பரி­காசம் செய்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,

“ஓ.பன்­னீர்­செல்வம் முத­ல­மைச்­ச­ராகப் பொறுப்­பேற்று 125 நாட்­க­ளுக்கு மேலான பிறகு, இப்­போ­துதான் கன்னி முயற்­சி­யாக அவர் தலை­மையில் முதல் அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெ­று­கி­றது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் 29இல் பன்­னீர்­செல்வம் முதல்­வ­ராகப் பொறுப்­பேற்று நான்கு மாதங்கள் முடி­வ­டைந்த பிறகு, முத­லா­வது அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை நடத்­து­கிறார். இதற்குக் கூட முத­ல­மைச்சர், ஜெய­ல­லி­தாவைச் சந்­தித்து ஒப்­புதல் பெற்ற பிற­குதான் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தைக் கூட்­டு­வ­தாக செய்தி வந்­துள்­ளது.

அ.தி.மு.க. ஆட்சி எவ்­வாறு செயல்­ப­டு­கி­றது என்­ப­தற்கு இது ஒன்றே உதா­ரணம். அது­வும்­கூட விரைவில் சட்­டப்­பே­ரவைக் கூட்டம் தொடங்க வேண்­டிய நிலையில் அமைச்­ச­ர­வையைக் கூட்டி விவா­திக்க வேண்டும் என்ற கட்­டா­யத்தின் பேரில் கூட்­டு­கி­றார்­களாம்.

தமி­ழ­கத்தில் “முக­மூடி முதல்வர்” ஒருவர் தலை­மையில் “ரிமோட் கண்ட்ரோல்” ஆட்சி நடைபெற்று வருவதாக அல்லவா அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here