ஜாவா கடலில் 162 பேருடன் விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானத்தின் துணை விமானியினது சடலம் அந்த விமானத்தின் ஆசனத்தில் பட்டியால் இணைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மேற்படி விமானத்தில் பயணித்து காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பி. சுப்பிரியடி அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஜாவா கடலிலிருந்து மீட்கப்பட்ட விமானத்தின் முன்பக்க கட்டமைப்பிலேயே துணை விமானியினது என நம்பப்படும் உருக்குலைந்த சடலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்தச் சடலம் அணிந்திருந்த ஆடை மற்றும் பதவி நிலையைக் குறிக்கும் அடையாளங்கள் என்பன அது துணை விமானிக்குரியது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.