களனி கங்கையை அண்மித்துள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற உத்தரவு!

0
339


சிறீலங்காவில் , இரண்டு நாட்களாக தொடரும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். கனமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் களனி கங்கையை அண்மித்த கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டிய, களனி, பியகம, ஹன்வெல, பாதுக்க மற்றும் அவிஸ்ஸாவெல்ல ஆகிய பிரதேசங்களில் வசிப்போர் இன்று இரவிற்குள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தென் மாகாணங்களில் ஜின் கங்கை, நில்வலா மற்றும் களு கங்கையை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்போர், குறித்த நதிகள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும், அதனால் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் படி வேண்டப்பட்டுள்ளனர்.
அத்தோடு மலைப்பாங்கான பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் மண்சரிவுகளை தவிர்ப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் படி பணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக களுத்துறை மற்றும் இரத்தினபுரிமாவட்டங்கள் மன்சரி அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஏனைய நுவரெலியா மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயங்கள் நிறைந்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here