சிறீலங்கா , இரத்தினபுரி நகரில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக மேலதிக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
களுகங்கை பெருக்கெடுத்ததில் இரத்தினபுரி நகரம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது..
ஆற்று நீர் நகருக்குள் புகுந்ததில் இரத்தினபுரி நகரின் 10 பிரதேச செயலகப்பிரிவுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மக்களை மீட்கும் பணியில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 33 பேரை காணவில்லையெனவும் காணாமல்போனோரை மீட்கும் பணி இடம்பெற்றுவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகலவத்தை, மாவத்தவத்த பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
மூன்று வீடுகளே மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் அவ் வீட்டில் இருந்தவர்களே மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்பு அதிகரித்து செல்வதாகவும் , பல இடங்களில் மீட்பு குழுவினர் செல்ல முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.